என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயிலை கவிழ்க்க முயற்சி"
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் ரெயில் இன்று காலை 9 மணிக்கு ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு விருத்தாசலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது கூத்தக்குடி முகாச பாரூர் என்ற இடத்தில் மர்மநபர்கள் யாரோ தண்டவாளத்தின் மீது சிமெண்ட் சிலாப்பை வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த சிலாப்பின் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதனால் சிலாப் தூள், தூளாக உடைந்து சிதறியது. இதை கவனித்த என்ஜீன் டிரைவர் உடனே ரெயிலை அங்கு நிறுத்தி, விட்டு, உயர் அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கொடுத்தார்.
இதையடுத்து உயர் அதிகாரிகள், ஆர்.பி.எப். போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு பார்வையிட்டனர். மேலும் தண்டவாளம் சேதமாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
பின்னர் ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த உடைந்த சிலாப் துண்டுகளை அகற்றி, தண்டவாளத்தை சரி செய்தனர். அதன் பிறகு ரெயில் அங்கிருந்து தாமதமாக புறப்பட்டு விருத்தாசலத்தை நோக்கி சென்றது.
ரெயிலை கவிழ்க முயன்ற நாசகார கும்பல் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க கூத்துக்குடி மற்றும் முகாச பாரூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து கடந்த 19-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பயணிகள் ரெயில் சேலத்துக்கு புறப்பட்டு வந்தது. அந்த ரெயில் மதியம் 2.20 மணியளவில் கூத்தக்குடி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது.
அப்போது தண்டவாளத்தில் நீண்ட வரிசையில் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் நாசவேலை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தண்டவாளத்தின் அடியில் உள்ள சிமெண்டு கட்டையுடன் இணைக்கும் 15-க்கும் மேற்பட்ட இரும்பு ‘கிளிப்’புகளை யாரோ ? உடைத்து தண்டவாளத்தின் மீது வைத்திருந்தனர்.
இது குறித்து அவர் கூத்தக்குடி ரெயில் நிலையத்துக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைத்தனர். அதன்பிறகு மாலை 4.20 மணி அளவில் பயணிகள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சேலத்தை நோக்கி வந்தது.
இந்த சம்பவம் குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்ப்பதற்காக நாசவேலையில் ஈடுபட்டார்களா? அல்லது குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என விசாரணை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய ஊழியர்கள் 3 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
அதன் அடிப்படையில் கூத்தக்குடி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மகேந்திரன் (வயது 36), மணிவேல் (32) ரகுராமன் (40) ஆகிய 3 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது தொடர்ந்து பணி வழங்கியதால் பணி சுமையால் 3 பேரும் தவித்ததாகவும், அதற்காக ரெயில்வே அதிகாரிகளை பழி வாங்கும் நோக்கில் கிளிப்புகளை கழற்றியதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதிகாரிகளை பழிவாங்க ரெயிலை கவிழ்க்கும் செயலில் ஊழியர்கள் 3 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனால் 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்